ஜகார்த்தா தாக்குதல்காரர்களுக்கு ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு

ஜகார்த்தா தாக்குதல்காரர்களுக்கு ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு

2 mins read
63637986-4ae5-4b8f-8201-83e3ff2a7201
-

இந்தோனீசியாவின் கிழக்கு ஜகார்த்தா நகரிலுள்ள ஒரு பேருந்து முனையத்தில் பயங்கர வாதிகள் இருவர் நேற்று முன் தினம் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் மூன்று போலிஸ் காரர்கள் கொல்லப்பட்டனர்; 11 பேர் காயமடைந்தனர். தாக்குதல்காரர்களாகச் சந் தேகிக்கப்படும் இக்வான் நூருல் சலாம், சொலிகின் ஆகிய இரு வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்து இருந்தனர் என்று இந்தோனீசிய போலிஸ் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் அவ்விருவரும் மாண்டு போயினர். குறைந்த வீரியமுள்ள வெடிபொருட்களை அவர்கள் தாக்குதலுக்குப் பயன் படுத்தியதாக போலிஸ் குறிப்பிட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் பண்டுங்கில் நிகழ்ந்த தாக்கு தலிலும் இதே போன்ற வெடி பொருட்களே பயன்படுத்தப்பட்டன. முதல் வெடிகுண்டு பொதுக் கழிவறைக்கு வெளியே வெடித்த தாகவும் அங்கிருந்து பத்து மீட்டர் தொலைவில் அமைந் துள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் இரண்டாவது வெடிகுண்டு வெடித்ததாகவும் போலிஸ் பேச் சாளர் செட்யோ வசிஸ்டோ செய் தியாளர்களிடம் தெரிவித் தார். அலுமினியத் தட்டுகள், ஆணிகள், 'பிரஷர் குக்கர்', வெடிகுண்டு தயாரிக்கப் பயன் படும் பிற பொருட்கள் போன்ற வற்றை கடந்த 22ஆம் தேதி மேற்கு ஜாவாவில் உள்ள ஒரு கடையில் வாங்கியதற்கான விலைப்பட்டியலை சம்பவ இடத் தில் போலிசார் கண்டெடுத்தனர்.

தற்கொலைத் தாக்குதல் நிகழ்ந்த ஜகார்த்தா கம்போங் மெலாயு பேருந்து முனையத்தில் கிடைத்த சான்றுகளைக் காட்டும் இந்தோனீசிய தேசிய போலிஸ் பேச்சாளர் செட்யோ வசிஸ்டோ. தாக்குதல் நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் சொலிஹின் (வலது மேல்படம்), இக்வான் நூருல் சலாம். படம்: இந்தோனீசிய போலிஸ்