காலாங்- பாய லேபார் விரைவுச் சாலை சுரங்கப் பாதையில் நேற்றுக் காலை நிகழ்ந்த விபத்தில் லாரி ஒன்று பக்கவாட்டில் சாய்ந்து சேதமடைந்தது. பாதையின் இரு தடங்களை மறைத்தவாறு லாரி சாய்ந்திருந்ததால் விரைவுச் சாலை யின் நிக்கல் ஹைவே வெளிவழி போக்குவரத்துக்கு மூடப்பட்டது. லாரியின் பின்னால் நின்றிருந்த பல வாகனங்களைச் சேர்ந்தவர்கள் லாரியிலிருந்து அதன் ஓட்டுநரை பத்திரமாக வெளியேற்ற உதவினர்.
அறுபதுகளில் இருக்கும் அந்த ஓட்டுநர் டான் டோக் செங் மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைப் பேச்சாளர் தெரி வித்தார். சுவர் மீது லாரி மோதி யதன் காரணமாக ஓட்டுநர் கட்டுப் பாட்டை இழந்ததாகவும் அதன் பின்னர் சாலைத் தடுப்பில் லாரி மோதியதாகவும் நம்பப்படுகிறது. இச்சம்பவம் பற்றி போலிசார் விசாரித்து வருகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

