கணினிகள் உயிர்பெற்றன; ஆனாலும் லண்டன் நெருக்கடி தொடர்கிறது

கணினிகள் உயிர்பெற்றன; ஆனாலும் லண்டன் நெருக்கடி தொடர்கிறது

2 mins read
516bb24c-87ee-4489-b8cb-d50d5c3e3908
-

லண்டன்: பெரும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான கணினிகள் மீண் டும் உயிர்பெற்று செயல்படத் தொடங்கியிருக்கின்றன என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் நேற்று தெரி வித்தது. உலக முழுவதும் பிரிட்டிஷ் ஏர் வேசின் ஆயிரக்கணக்கான பய ணிகள் நடுவழியில் சிக்கித் திண் டாடி வருகின்றனர். பிரிட்டிஷ் நேரப்படி பிற்பகல் 3.30 மணி வரையில் ஏறக்குறைய 115 பிரிட்டிஷ் விமானச் சேவைகள் அல்லது 13 விழுக்காட்டு சேவை கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 311 சேவைகள் அல்லது 35 விழுக்காடு சேவைகள் பாதிக்கப் பட்டன என்று பிரிட்டிஷ் விமான நிறுவனம் நேற்று டுவிட்டர் பதி வில் தெரிவித்தது.

சனிக்கிழமை பிரிட்டிஷ் ஏர் வேசின் தொழில்நுட்ப சாதனங்கள் செயலிழந்ததால் ஹீத்ரோ, கேட் விக், தெற்கு லண்டன் ஆகிய விமான நிலையங்களில் மொத்தம் 418 விமானச் சேவைகள் பாதிக்கப் பட்டதாக ஆய்வு நிறுவனம் ஒன்று கூறுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட விமானச்சேவைகள், பயணிகளின் எண்ணிக்கை விவரங்களை பிரிட் டிஷ் ஏர்வேஸ் வெளியிட மறுத்து வருகிறது. இந்நிலையில் "விமான நிலை யத்தில் பணிபுரியும் அனைத்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்களும் நிலைமை வழக்க நிலைக்குத் திரும்ப அரும்பாடுபட்டு வருகின்ற னர்," என்று தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் குருஸ் ஞாயிற்றுக்கிழமை அன்று காணொளி வழி தெரிவித்தார்.

"உங்களுக்காக எங்களால் இயன்ற அளவில் பிரச்சினை களுக்குத் தீர்வு கண்டு வரு கிறோம். "இது, பயணிகளுக்கு பயங்கர மான நேரமாக அமைந்திருக் கலாம். ஏராளமான பயணிகள் விடுமுறையைத் தவற விட்டிருக் கலாம். "பயணப்பெட்டிகளைப் பெற முடியாமல் போயிருக்கலாம். விமானச் சேவைகளின் விவரங் கள் கிடைக்காமல் போயிருக்க லாம். "இதற்காக பிரிட்டிஷ் ஏர் வேசில் உள்ள அனைவரது சார் பிலும் மன்னிப்பு கேட்கிறேன்," என்றும் அவர் சொன்னார்.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் முனையம் 5ல் மறுபதிவு செய்வதற்காகக் காத்திருக்கும் பயணிகள். படம்: ராய்ட்டர்ஸ்