ஆஸ்திரேலிய முன்னாள் அமைச்சருக்கு சிங்கப்பூரின் ஆக உயரிய ராணுவ விருது

ஆஸ்திரேலிய முன்னாள் அமைச்சருக்கு சிங்கப்பூரின் ஆக உயரிய ராணுவ விருது

1 mins read
07569a42-e254-4247-800c-f20dc0246e9b
-

ஆஸ்திரேலியாவின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் டென்னிஸ் ஜேம்ஸ் ரிட்சர்ட்சன் நேற்று இஸ்தானாவில் சிங்கப்பூரின் ஆக உயரிய ராணுவ விருதான தனிச் சிறப்புமிக்க சேவை விருதைப் (ராணுவம்) (தார்ஜா உத்தமா பக்தி செமர்லாங்) பெற்றுக்கொண்டார். அந்த விருதை சிங்கப்பூரின் அதிபர் டோனி டான் கெங் யாம் அவருக்கு வழங்கினார். ஆஸ்திரேலியாவுக்கும் சிங்கப் பூருக்கும் இடையில் நீண்டகால மாக நிலவிவரும் அணுக்கமான தற்காப்பு உறவுகளைப் பலப்படுத்த குறிப்பிடத்தக்க தொண்டு ஆற்றிய தற்காக ஆஸ்திரேலிய முன்னாள் அமைச்சருக்கு அந்த விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டதாக தற் காப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

திரு ரிட்சர்ட்சன், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், தற்காப்பு அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சான் யெங் கிட் ஆகியோரை நேற்றுச் சந்தித்த தாகவும் அமைச்சு தெரிவித்தது.

அதிபர் டோனி டான், (இடது) ஆஸ்தி ரேலியாவின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் ரிட்சர்ட்சன் னுக்கு சிங்கப்பூரின் ஆக உயரிய ராணுவ விருதை வழங்கினார். படம்: தற்காப்பு அமைச்சு