பொருத்தமான காலம் சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்கு இன்னும் பொருத்தமான காலம் வரவில்லை என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் நேற்று தெரிவித்தார். சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகளில் இவ்வாண்டு தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களை அந்நடவடிக்கை களைத் தளர்த்துவதற்கான அறிகுறி யாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்ட சில நோக்கங் களுக்காக அந்த மாற்றங்கள் அறி விக்கப்பட்டன என்றும் திரு மேனன் சொன்னார். கடந்த மார்ச் மாதத்தில் வீடு விற்பவருக்கான முத்திரைத்தாள் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.
இருப்பினும், தொடர்ந்து வட்டி விகிதங்கள் குறைவாக இருந்துவரும் சூழ்நிலையில் தனியார் குடியிருப்புச் சொத்துகளுக்கான தேவை வலுவாக இருந்து வருவதால் சொத்துச் சந்தைத் தணிப்பு நட வடிக்கைகள் நீடிக்க வேண்டியது அவசியம் என்று திரு மேனன் குறிப்பிட்டார். "இவ்வட்டாரத்தில் சொத்துச் சந்தை துடிப்புமிக்கதாக இருந்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் கூடுதலான சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட ஆணையங்கள் அறிமுகப் படுத்தியுள்ளன," என்றும் அவர் தெரிவித்தார். "இந்த வேளையில் சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகளைத் தளர்த்துவது தவறான அறிகுறியாக அமைந்துவிடக்கூடும்," என்றார் அவர். இடைப்பட்ட பருவத்தில், பொரு ளியலில் காணப்படும் விரிவான வருமானப் போக்குகளுக்கு ஏற்ப சொத்து விலைகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

