சிங்கப்பூரின் பொருளியலை அடுத்த பத்தாண்டுகளில் வலுவுள் ளதாக மாற்றும் பெரிய உள் ளமைப்புத் திட்டங்களில் சிங்கப்பூர் ஈடுபட்டுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சரும் இரண்டாம் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் நேற்றுக் காலை நடைபெற்ற சிங் கப்பூர் வட்டார தொழில் கருத் தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர், "சிங்கப்பூர் ஒரு சிறிய சிவப்புப் புள்ளியாக இருக்கலாம். நாம் ஏற் கெனவே வளர்ச்சி கண்டுவிட் டோம் என்று உங்களில் பலர் கருத்து கொண்டிருக்கலாம். "ஆனால் சிங்கப்பூரை இன்னும் நாம் முழுமையாக உருவாக்க வில்லை என்பதே உண்மை. நாம் நமக்கு வகுக்கப்பட்ட வளர்ச்சி எல்லைகளை இன்னும் எட்ட வில்லை," என்றார்.
"நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு இருக்கும் உள்கட்ட மைப்பு என்பது பல்வேறு பெரிய அம்சங்களை உள்ளடக்கியது. உதாரணத்திற்கு, இப்போதுள்ள சாங்கி விமான நிலையத்தை எடுத்துக்கொண்டால் ஐந்தாவது முனையத்தை நாம் கட்ட உள் ளோம். இப்போதுள்ள சாங்கி விமான நிலையத்தில் நாம் காணும் ஒவ்வொன்றையும் அந்த முனையம் இரட்டிப்பாக்கும். கடற்துறைமுகங் களை எடுத்துக்கொண்டால் அவை பெரியதாகவே உள்ளன. "இருப்பினும் சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் நாம் கட்ட விருக்கும் துவாஸ் பெரிய துறை முகம் இப்போதுள்ள துறைமுகத் தின் கொள்ளளவைவிட இரு மடங்கு பெரியதாக இருக்கும். "இவற்றைப்போலவே மலேசியா உடனான ரயில் தொடர்பில் மேம் பாடு காண்பதும் குறிப்பிடத்தக் கது. மலேசியாவுக்கான ரயில் போக்குவரத்து இவ்வட்டாரத்தில் சிங்கப்பூர் கொண்டுள்ள இணைப்பு களை மேலும் அதிகப்படுத்தும்.