சுதாஸகி ராமன்
பாலர் பள்ளி தமிழ் வகுப்புகளுடன் தமிழ்மொழி கற்றல் நின்றுவிடுவ தில்லை. அதனை வீட்டிலும் பேச வேண்டும் என்று தெரிவித்தார் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவ ருமான திரு விக்ரம் நாயர். ஆறாவது ஆண்டாக நேற்று நடைபெற்ற தாய்மொழிக் கருத் தரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய திரு விக்ரம், சிறு வயதிலிருந்தே தாய்மொழியைக் கற்கும்போது அது பிற மொழி களைச் சுலபமாகக் கற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்றார்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கருத்தரங்குக்குக் கல்வி அமைச்சும் தாய்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. கருத்தரங்கு சன்டெக் சிட்டி மாநாட்டு, கண்காட்சி மையத்தில் நடைபெற்றது. பலவிதமான நிகழ்ச்சிகளின் மூலம் கருத்தரங்கில் பள்ளிகளும் சமூக அமைப்புகளும் ஒன்று இணைந்து தாய்மொழிக் கற்றலை மேம்படுத்தும் முயற்சிகளைப் பகிர்ந்துகொண்டன.
'நம் மொழிகளின் அதிசய உலகில் திளைத்திருப்போம்' என்ற கருப்பொருளைக் கொண் டிருந்த இவ்வாண்டின் கருத் தரங்கில் அனைவரையும் ஈடு படுத்தி அனுபவங்களை அளிக்கும் அணுகுமுறையின் மூலம் தாய்மொழிக் கற்பித்தல் பற்றி சிறுவர்கள், பெற்றோர் ஆகியோர் அறிந்துகொண்டனர். கருத்தரங்கில் 30 பகிர்வு நிகழ்ச்சிகளும் பயிலரங்குகளும் இடம்பெற்றன. அவற்றோடு பள்ளி கள், பல்வேறு பங்காளித்துவ அமைப்புகள் ஆகியவை அமைத்த 43 காட்சிக்கூடங்களுக்குச் சென்று தாய்மொழிக் கற்பித்தல் உத்திகளைப் பற்றி பங்கேற்பாளர் கள் தெரிந்துகொண்டனர்.
கருத்தரங்கில் 'ஐ-பேட்' வழியாகத் தமிழைக் கற்பிக்கும் முறையை தேசிய கல்விக் கழகத்தைச் சேர்ந்த பயிற்சி தமிழாசிரியர்கள் அமைச்சர் இங் சீ மெங்கிடம் பகிர்ந்தனர். படம்: சாவ்பாவ்

