சிங்கப்பூருக்கு அருகே விபத்துக் குள்ளான அமெரிக்க போர்க் கப்பலிலிருந்து காணாமல்போன பத்து பேரை தேடி மீட்கும் முயற் சியில் நேற்று உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அமெரிக்காவின் பசிபிக் படைப் பிரிவின் தளபதியான அட்மிரல் ஸ்காட் சுவிஃப்ட் இதனை நேற்று செய்தியாளர் கூட்டத்தில் தெரி வித்தார். சாங்கி கடற்படைத் தளத்தில் அவர் பேசினார். அமெரிக்கக் கப்பலின் உள்ளே மோதலால் நசுங்கியிருந்த பகுதி யில் உடற்பகுதிகளை அமெரிக்க முக்குளிப்பு வீரர்கள் கண்டு பிடித்தனர் என்றார் அவர். மலேசியாவும் ஒரு சடலத்தை கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் உடற்பாகங்கள் இன்னமும் அடையாளம் காணப்பட வில்லை. மூன்று உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அவற்றை அடையாளம் காணும் பணி மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் சில தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப் பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண் டது. அமெரிக்கப் போர்க் கப்பலி லிருந்து காணாமல்போன பத்து மாலுமிகளைத் தேடும் பணி நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. இதற்காக ஏராளமான வளங் கள் பயன்படுத்தப்படுகின்றன என்று சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையத்தின் தலைமை நிர்வாகி ஆண்ட்ரு டான் தெரிவித்தார். காணாமல்போன மாலுமி களைத் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அமெரிக்காவின் வளங்கள் உட்பட தேடும் பணியில் ஏராளமான வளங்கள் பயன்படுத்தப்படுவதாக வும் அவர் சொன்னார். "மாலுமிகளைத் தேடும் முயற் சியில் எந்தவித தொய்வும் ஏற் பட்டுவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனை வரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம்," என்றார் அவர்.
அமெரிக்கக் கப்பல் விபத்தில் காயம் அடைந்த நால்வரை மீட்ட சிங்கப்பூரின் 'சூப்பர் பூமா ஹெலிகாப்டர்' அவர்களை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்த்தது. படம்: தற்காப்பு அமைச்சு

