இளம்பருவ வளர்ச்சிக்கான தேசிய கல்விக் கழக மாணவர் சேர்க்கை 2019ல் தொடங்கும்

இளம்பருவ வளர்ச்சிக்கான தேசிய கல்விக் கழக மாணவர் சேர்க்கை 2019ல் தொடங்கும்

1 mins read
586a2c36-69b4-4e4d-8c20-40561ae1fc15
-

ஆரம்பகால மழலையருக்கான நிபுணர் களை உருவாக்கும் நோக்குடன் புதி தாக அமையவிருக்கும் இளம்பருவ வளர்ச்சிக்கான தேசிய கல்விக் கழகம் வரும் 2019ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையைத் தொடங்கும் என்று கல்வி அமைச்சு நேற்று தெரி வித்தது. தேசிய கல்விக் கழகத்தின் ஒரு பகுதியாக அமையவிருக்கும் அக் கழகம் தற்போதைய கல்வி அமைச்சின் கல்வி சேவைகளுக்கான பிரிவு இயக்குநர் லோக்=இயோ டெக் யோங், 50, தலைமையில் இயங்கும். இந்தப் புதிய கல்விக் கழகத்தின் எல்லாப் பாடப் பிரிவுகளும் தொழில் நுட்ப கல்விக் கழகம், நீ ஆன் மற்றும் தெமா செக் பலதுறைத் தொழிற் கல்லூரிகள், Seed கல்விக் கழகம் ஆகியவற்றின் பயிற்சித் திட்டங் களின்கீழ் நடத்தப்படும். இந்த நான்கு பயிற்சிக் கழகங் களும் இளம்பருவ வளர்ச்சிக்கான தேசிய கல்விக் கழகத்தின்கீழ் ஒன் றிணைக்கப்படும்.