கடல் நீருக்குள் பாய்ந்த கார்; கண்ணாடியை உடைத்து மீட்கப்பட்ட ஓட்டுநர் கைது

கடல் நீருக்குள் பாய்ந்த கார்; கண்ணாடியை உடைத்து மீட்கப்பட்ட ஓட்டுநர் கைது

1 mins read
36ddbadc-8cbc-408d-bbe8-00e4687805a8
-

'செந்தோசா கோவ்'வில் கடல் நீருக்குள் பாய்ந்த காரில் இருந்த 36 வயது ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட் டார். கிரிமினல் குற்றச்சாட்டின் பேரில் பின் னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட செந்தோசா ஊழியர் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஓஷன் டிரைவில் ஒரு காரும் செந்தோசா பண்ணைக் காவலர் ஒருவரும் சம்பந்தப்பட்ட விபத்து பற்றி பிற்பகல் 2.08 மணிக்கு தங் களுக்குத் தகவல் வந்ததாக போலிஸ் தெரிவித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஓட்டுநர் நல்ல நினைவுடன் இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. செந்தோசா பண்ணைக் காவலருக்கு லேசான காயம் ஏற் பட்டது. அவரும் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்த போலிஸ், விசாரணையைத் தொடருகிறது. இதனிடையே சம்பவத்தை நேரே பார்த்த ஆங் சீ பூன் என்பவர் முக்குளிப்பாளர் ஒருவர் கடலில் குதித்து ஆடவரைக் காப்பாற்றிய தாகத் தெரிவித்தார். கார் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது. ஆனால் அந்த முக்குளிப்பாளர் முந்திக் கொண்டு படுவேகமாகச் செயல்பட்டு ஆட வரைக் காப்பாற்றிவிட்டதாகவும் அவர் கூறி னார்.

மூழ்கிக்கொண்டிருந்த கார். காணொளி படம்: லெய் ஸிப்பிங்