பாலர் பள்ளி மேம்பாடு: 'பிசிஎஃப்' உதவும்

பாலர் பள்ளி மேம்பாடு: 'பிசிஎஃப்' உதவும்

1 mins read
41e4aec2-fb73-42b0-bea4-5bd4052b7ab9
-

பாலர் பள்ளிகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பிசிஎஃப் எனப்படும் மசெக சமூக அறநிறுவனம் ஆதரவு வழங்கும் என பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார். கல்வி புகட்டுவதோடு நில்லா மல் ஒருபடி மேலே சென்று கலை மற்றும் விளையாட்டின் மீதான குழந்தைகளின் ஆர்வத்தை வளர்ப்பதில் பிசிஎஃப் உதவிபுரி யும் என்றும் அவர் குறிப்பிட்டார். மக்கள் செயல் கட்சியின் சமூக அறநிறுவன அமைப்பான பிசிஎஃப் சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான பாலர் பள்ளிகளை நடத்துகிறது. 360 குழந்தை பராமரிப்பு மற்றும் பாலர் பள்ளி களை அது நடத்தி வருகிறது. பிசிஎஃப்பின் வருடாந்திர குடும்ப தினம் நேற்று சிங்கப்பூர் தேசிய காட்சிக்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்றுப் பேசிய பிரதமர் லீ, நாடகம், ஓவியம், சீரு டற்பயிற்சி, தற்காப்புக் கலை உள் ளிட்ட செறிவூட்டல் திட்டங்கள் மூலம் மாணவர்களின் கலை, விளையாட்டு மீதான ஆர்வத்தை வளர்க்க பிசிஃஎப் கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் என்றார்.

குழந்தைகள் படைத்த கலைநிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார் பிரதமர் லீ சியன் லூங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்