சிங்கப்பூரின் மூன்றாவது மருத்துவப் பள்ளி நேற்று அதி காரபூர்வமாகத் திறந்து வைக்கப் பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு 54 மாணவர்களுடன் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் 'லீ கோங் சியான்' மருத்து வப் பள்ளியை துணைப் பிரத மரும் தேசிய பாதுகாப்பு ஒருங் கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். இப்பள்ளியில் தற்போது படித்து வரும் மாணவர்கள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் பட்டம் பெறவிருக்கின்றனர். இந்தப் பள்ளியின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய துணைப்பிரதமர் டியோ, "வருங்காலத்தில் மருத்துவத் துறையை தொழில்நுட்பம் மாற்றிய மைக்கும். இதனால் புதிய அறி வியல் தொழில்நுட்பங்களை மருத்துவர்கள் கற்றறிவது அவசியம்," என்றார். "அனைத்து நாடுகளும் இன்று வெவ்வேறு வழிகளில் இணைக்கப் பட்டுள்ளன. இதனால் நோய்கள் உருவாகி எல்லைகளைத் தாண்டி பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள் ளது. இந்த அபாயத்தை தடுத்து நிறுத்த அனைத்து நாடுகளும் எல்லைகளைத் தாண்டி ஒன்று இணைந்து செயல்படவேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரின் 3வது மருத்துவப் பள்ளியின் திறப்பு விழாவில் காலப்பெட்டகத்தைக் காட்டும் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன். புதிய மருத்துவப் பள்ளியின் திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில் காலப்பெட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

