செனோக்கோ மீன்பிடித் துறை முகத்தில் நேற்று ஒரு துப்பாக்கிக் காரன் திடீரென புகுந்து துப்பாக்கி யால் சுடத் தொடங்கினான். ஆயினும், இது உண்மையான சம்பவமல்ல! உள்துறைக் குழுவால் நடத்தப்பட்ட பாவனைப் பயிற்சியே இது. உள்துறைக் குழு தனது பாது காப்புச் செயல்திறன்களை வெளிக் காட்டிய இந்த பாவனைப் பயிற் சியை பிரதமர் லீ சியன் லூங் நேரில் பார்வையிட்டார். உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி யையும் பார்வையிட்ட திரு லீ, அது குறித்த ஒரு காணொளியைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் 'டெலிகிராம்' இணைய ஒளிவழி யிலும் பகிர்ந்துகொண்டார்.
சிங்கப்பூரை அறிவார்ந்த தேச மாக உருமாற்ற அரசாங்கம் பல் வேறு முயற்சிகளை எடுத்து வரும் வேளையில், உள்துறைக் குழு அதி காரிகள் தங்களது செயல்முறை களில் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்துகொள்ளத் தான் விரும்பிய தாக பிரதமர் லீ குறிப்பிட்டார். "உலகின் பாதுகாப்புமிக்க நகரங்களில் ஒன்றாக சிங்கப்பூரை உருவாக்க உள்துறைக் குழு உதவியிருக்கிறது. அவர்களது அர்ப்பணிப்பு, நிபுணத்துவம், கடின உழைப்பு ஆகியவை அன்றாட வாழ்வில் நமக்கு மனஅமைதியைத் தருகின்றன," என்று அவர் கூறி னார். "உங்களது கண்காணிப்பால் நாங்கள் பாதுகாப்பாக இருக்கி றோம். உங்களுடைய நற்பணி தொடரட்டும்," என்று அவர் உள் துறைக் குழுவையும் வாழ்த்தினார்.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தானியக்க பயணிகள் கார் அனுமதி முறையைச் சோதித்துப் பார்க்கிறார் பிரதமர் லீ சியன் லூங். காரின் பின் இருக்கையில் பிரதமரின் துணைவியார் திருவாட்டி ஹோ சிங். படம்: பிரதமரின் ஃபேஸ்புக் பக்கம்

