சிங்கப்பூர் நிறுவனம் சீனாவில் $206 மில்லியன் முதலீடு

சிங்கப்பூர் நிறுவனம் சீனாவில் $206 மில்லியன் முதலீடு

1 mins read
50fd0ec5-94bc-4437-9195-6faa0ed2c324
-

சீனாவின் தெற்கு குவான்சி மாநிலத்தில் ஒருங்கிணைந்த தளவாடப் போக்குவரத்து பூங்கா ஒன்றை உருவாக்க சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தொடக்கமாக $206 மில்லியனை (1 பில்லியன் யுவான்) முதலீடு செய்கிறது. குவான்சி தன்னாட்சி வட் டாரத்தின் தலைநகரான நான்னிங் நகரில் அந்த தளவாடப் போக்குவரத்துப் பூங்கா தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் அலுலவக அமைச்சர் சான் சுன் சிங் நேற்று கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் உரை யாற்றிய அமைச்சர், சீனாவின் குவான்சி வட்டாரத்தை மேற்குப் புற சோங்சிங் வட்டாரத்துடன் இணைக்கும் ரயில்வே கட்ட மைப்பிற்கு ஆதரவாக இந்த புதிய பூங்கா முக்கிய பணியாற்ற முடியும் என்று குறிப்பிட்டார்.

ஒரு நிமிடம் மேடையில் தோன்ற வேண்டுமானால் அதற்கு 10 ஆண்டு பயிற்சி வேண்டும் என்ற ஒரு சீன பழமொழியை மேற்கோள்காட்டிய அமைச்சர், சீனாவின் மேற்குப் புறத்திற்கு உரிய புதிய அந்த ரயில் கட்டமைப்பு நெடுகிலும் சரக்குகளைக் கொண்டு செல்லவும் கொண்டு வரவும் தடையில்லாத வசதிகளை ஏற்படுத்துவதில் இந்த புதிய பூங்கா நல்ல ஒரு தொடக்கமாக இருக்கிறது என்றார். பசிபிக் இண்டர்நேஷனல் லைன்ஸ் என்ற சிங்கப்பூர் நிறுவனம் சீனாவில் செய்யும் முதலாவது முதலீடு இந்தப் பூங்காவாகும். இந்தப் பூங்கா மூன்று சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும்.

பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் (இடது) சீனாவின் குவான்சி தன்னாட்சி வட்டார கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தலைவர் சின்குவாயை நான்னிங் நகரில் சந்தித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்