வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் புதிய புளோக்குகளில் சூரிய சக்தி தகடுகள் இனிமேல் வேக மாகவும் குறைந்த செலவிலும் பொருத்தப்படும். இந்த ஆண்டு மே மாதம் முதல், மேற்கூரையில் போதிய அளவு இடத்தைக் கொண்டுள்ள தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளில் (பிடிஓ) சூரிய சக்தி தகடுகளைப் பொருத்தும் வகை யில் வடிவமைப்புகள் இடம்பெறு கின்றன என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. இதற்கேற்ப மேற்கூரையில் தண்ணீர்த் தொட்டிகள் பலவும் திருத்தி அமைக்கப்படுகின்றன. இத்தகைய கூரைகளில் சூரிய சக்தி தகடுகளைப் பொருத்துவது எளிதாக இருக்கும். 40 நாட் களுக்குப் பதிலாக 25 நாட்களில் அவற்றைப் பொருத்திவிடலாம், செலவும் 40% குறையும் என்று கழகம் தெரிவித்துள்ளது.
இத்தகைய சூரிய சக்தி தகடு களிலிருந்து பெறப்படும் மின் சக்தி, மின்தூக்கி போன்ற அந்த புளோக்கின் பொதுவான சேவை களுக்குப் பயன்படுத்தப்படும். சூரிய சக்தியைப் பயன்படுத்தும் திட்டத்தை வீவக 2008ல் தொடங்கியது. இந்தத் திட்டத் தின்கீழ் 5,500 புளோக்குகளில் ஒரே காலகட்டத்திற்குள் அந்தத் தகடுகளைப் பொருத்துவது வீவகவின் இலக்கு. இதன் மூலம் ஒவ்வோர் ஆண் டும் சுமார் 55,000 நாலறை வீடு களுக்குத் தேவையான மின்சக்தி உருவாக்கப்படும். இந்தத் திட்டத் தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு கரிம வெளியீடுகளும் 132,500 டன் குறையும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி 944 வீவக புளோக்கு களின் மேற்கூரைகளில் சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
'பொங்கோல் எட்ஜ்' பிடிஓ திட்டத்தில் சூரிய சக்தி தகடுகள் முன்னோடித் திட்ட அடிப்படையில் பொருத்தப்பட்டு சோதித்துப் பார்க்கப்படுகின்றன. படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

