அதிபராகப் பொறுப்பேற்றார் ஹலிமா

அதிபராகப் பொறுப்பேற்றார் ஹலிமா

1 mins read
e02f4079-f868-4ce2-aadb-161129790ad9
-

சிங்கப்பூரின் எட்டாவது அதிபராக திருவாட்டி ஹலிமா யாக்கோப், 63, நேற்று பதவியேற்றுக்கொண் டார். சரியாக மாலை 6 மணிக்கு இஸ்தானாவிற்கு வந்த சிங்கப் பூரின் முதல் அதிபரான திருவாட்டி ஹலிமாவை மரியாதைக் காவல் அணி வரவேற்றது. தேசிய கீதம் ஒலிக்க, இஸ்தானாவில் நிகழ்ந்த பதவிப் பிரமாண நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் டோனி டான் கெங் யாம், அமைச்சர்கள், நீதித் துறையைச் சேர்ந்தவர்கள் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரதமர் லீ சியன் லூங், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் ஆகியோர் முன்னிலையில் திருவாட்டி ஹலிமா உறுதிமொழி எடுத்துக் கொண்டார். "சிங்கப்பூர் குடியரசின் அதிப ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹலிமா யாக்கோப் எனும் நான் உண்மையாகக் கடமையாற்று வேன் என உறுதியளிக்கிறேன்," என்று திருவாட்டி ஹலிமா உறுதி மொழி எடுத்துக்கொண்டார். அதன்பின் அதிபராகத் தமது முதல் உரையை ஆற்றிய திருவாட்டி ஹலிமா, "இனம், மொழி, சமய வேறுபாடின்றி எல்லா சிங்கப்பூரர் களுக்கும் கடமையாற்றுவேன்," என்று உறுதிகூறினார்.

பிரதமர் லீ சியன் லூங் (இடது), தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் (வலது) ஆகியோர் சாட்சியாக உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபரான திருவாட்டி ஹலிமா யாக்கோப். படம்: சாவ்பாவ்