வெளியேறிய வெட்டல்; முன்னேறிய ஹேமில்டன்

வெளியேறிய வெட்டல்; முன்னேறிய ஹேமில்டன்

1 mins read
87cf6f80-8ae4-40a5-b613-9e330c20dddd
-

சிங்கப்பூர் கிராண்ட் பிரி எஃப்1 கார் பந்தயத்தில் முன்னணியில் போட்டியைத் தொடங்கிய செபாஸ்டியன் வெட்டல் முதல் சுற்றிலேயே வெளியேறினார். மழையால் ஈரமான சாலையில் அவரது கார் முதல் சுற்றிலேயே திருப்பம் ஒன்றில் சக 'ஃபெராரி' குழு உறுப்பினர் கிமி ரைக்கோனென், 'ரெட்புல்' கார் ஓட்டிய மேக்ஸ் வெர்ஸ்டாப்பென் ஆகியோரின் கார்கள்மீது மோதியதில் கார்கள் கடுமையாகச் சேதமுற்றன. போட்டியின் தொடக்கத்துக்கு முன்பாகவே வெட்டலைவிட மூன்று புள்ளிகள் அதிகம் வைத்திருந்த லூவிஸ் ஹேமில்டன் ஐந்தாம் இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறினார். படம்: ராய்ட்டர்ஸ்