பங்ளாதேஷ்: உதவிப் பொருட்களைப் பெற முண்டியடித்ததில் மூவர் பலி

பங்ளாதேஷ்: உதவிப் பொருட்களைப் பெற முண்டியடித்ததில் மூவர் பலி

1 mins read
63a8decc-4238-437e-a02a-d59d1da9ff0e
-

பங்ளாதே‌ஷில் உள்ள ரோஹிங்யா அகதிகள் முகாமுக்கு அருகே உதவிப் பொருட்கள் வழங்கப்பட்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மிதிபட்டு இரண்டு சிறுவர், ஒரு பெண் ஆகியோர் சென்ற வெள்ளிக்கிழமை பலியானதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்தது. உதவிப் பொருட் களைப் பெறுவதில் அகதிகளுக் கிடையே சண்டை ஏற்படுவதாக வும் அது குறிப்பிட்டது. அதிகாரிகளிடம் அனுமதி ஏதும் பெறாமல் உதவிப் பொருட் களை பலர் அகதிகளுக்கு வழங்கி வருகின்றனர். அவ்வாறு பலுகாலி பகுதியில் உள்ள முகாமுக்கு அருகே உடைகளை அகதிகளுக்கு வழங்கியபோது ஏற்பட்ட நெரிசலில் மிதிபட்டு அம்மூவரும் இறந்துபோனதாக கூறப்பட்டது. ஆனால், நெரிசலில் சிக்கி யாரும் மாண்டுபோனதாகத் தக வல் இல்லை என போலிஸ் தரப் பில் சொல்லப்பட்டது. ஆனால், முகாமில் ஆறு மாதக் குழந்தை ஒன்று நிமோனியாவால் இறந்து போனதாகவும் 70 வயது முதிய வர் ஒருவர் இயற்கை மரணம் எய்தியதாகவும் போலிசார் தெரி வித்தனர். மற்றொரு முகாமில் ஆடவர் ஒருவர் சென்ற சனிக் கிழமை இறந்துபோனதாகவும் தெரிவிக்கப்பட்டது.