சீனப் பிரதமர்: சிங்கப்பூருடனான உறவுக்குப் பெரும் முக்கியத்துவம்

சீனப் பிரதமர்: சிங்கப்பூருடனான உறவுக்குப் பெரும் முக்கியத்துவம்

1 mins read
e40a58ea-c6d8-45d3-b0d2-8eba46c7c08d
-

சிங்கப்பூருடனான இருதரப்பு உற வுக்குச் சீனா பெரும் முக்கியத்துவம் அளிப்பதாக சீனப் பிரதமர் லீ கெச்சியாங் கூறியிருக்கிறார். பரஸ்பர மரியாதையை அடிப்படை யாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த உறவு இரு நாடுகளுக்கும் சமத்துவமானது என்றும் இருநாட்டு மக்களுக்கும் பலனளிப்பதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை நேற்று பெய்ஜிங்கின் மாபெரும் மக்கள் அரங்கில் சந்தித்தபோது சீனப் பிரதமர் லீ இவ்வாறு கூறினார். இரு நாட்டுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை இரு பிரதமர் களும் மறுஉறுதிப்படுத்தினர். அண் மைய மாதங்களில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் அடிக் கடி நடந்துவரும் மேல்மட்ட நிலை யிலான கலந்துறவாடலை இருவரும் வரவேற்றதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவு மேன்மேலும் வலுவடையும் என்றும் ஆசியானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் புதிய வலிமை சேர்க்க சிங்கப்பூர் உதவும் என்றும் தாம் நம்புவதாகவும் எதிர்பார்ப்பதாகவும் சீனப் பிரதமர் கூறினார்.

மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக சீனா சென்றுள்ள பிரதமர் லீ சியன் லூங்கிற்கு (வலது) ராணுவ அணிவகுப்புடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் சீனப் பிரதமர் லீ கெச்சியாங். படம்: சாவ் பாவ்