உதவிக்கு ஓடோடி வந்த வெளிநாட்டு ஊழியர்கள்

உதவிக்கு ஓடோடி வந்த வெளிநாட்டு ஊழியர்கள்

1 mins read
57b757c9-1e2f-45d5-834a-3436ababfa39
-

தவறாகத் திருப்பப்பட்டதால் படி களில் சரிந்தபடி நின்ற காரை மற்றவர்கள் தங்கள் கைபேசிகளில் படம் பிடித்தவாறு இருக்க, வெளி நாட்டு ஊழியர்கள் பலர் ஒன்று சேர்ந்து தள்ளி மீண்டும் சாலைக் குக் கொண்டு சென்ற சம்பவம் பொங்கோல் வாட்டர்வே பாய்ண்ட் கடைத்தொகுதியில் நேற்று முன் தினம் மாலையில் நிகழ்ந்தது. வெளிநாட்டு ஊழியர்களின் இச்செயலைக் கண்டு வியப்பும் நெகிழ்ச்சியும் அடைந்த திரு கேரெட் லிம், 38, அது தொடர் பான காணொளியையும் படங் களையும் தமது ஃபேஸ்புக் பக்கத் தில் பதிவேற்றம் செய்தார். அப்பதிவை இதுவரை ஏறத்தாழ 6,000 பேர் 'லைக்' செய்துள்ளனர்;

5,000 பேர் பகிர்ந்துள்ளனர். படிகளில் கார் நிற்பதைக் கண் டதும் அதைத் தானும் வேறு சிலரும் கைபேசிகளில் படம் பிடித் ததாகத் திரு லிம் கூறினார். "அவ்வழியே சென்ற வெளி நாட்டு ஊழியர்கள் மூவர் தங் களது கைபேசிகளைக் கையில் எடுக்க, அவர்களும் படம்பிடிக்கப் போகின்றனர் என்று நினைத்தேன். ஆனால், தங்கள் நண்பர்களை உதவிக்கு அழைத்தது கண்டு வியந்துபோனேன்," என்றார் திரு லிம்.

சரிந்து நின்ற காரை மற்றவர்கள் படம்பிடித்தபடி இருக்க, உடனடியாக அதை மீண்டும் சாலையில் சேர்க்கும் முயற்சியில் இறங்கிய வெளிநாட்டு ஊழியர்கள். படம்: கேரெட் அல்ஃபோன்சியஸ் லிம்/ஃபேஸ்புக்