ஐஎஸ்ஸில் சிங்கப்பூரர்

ஐஎஸ்ஸில் சிங்கப்பூரர்

1 mins read
a453a269-d3a0-412e-8619-023da5a68eb3
-

சிங்கப்பூரர் ஒருவர் இடம்பெற்றுள்ள ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அக்காணொளியில் இருப்பது மெகாட் ‌‌ஷாடான் அப்துல் சமட், 39, என்று அடையாளம் கண்டுள்ள உள்துறை அமைச்சு, பாதுகாப்பு அமைப்புகள் அவனது நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதையும் உறுதிப்படுத்தியுள்ளது. பணி நிமித்தமாக 2014ஆம் ஆண்டு மெகாட் மத்திய கிழக்கு வட்டாரத்திற்குச் சென்றதாகக் கூறிய அமைச்சு, அங்கு அவன் சுயதீவிரவாதப் போக்கிற்கு மாறி இருக்கலாம் என்று நம்புகிறது. "அங்கு சென்றபின் அவன் சிரியா சென்று ஐஎஸ்ஸில் இணைந்திருக்கலாம். இன்னும் அவன் அங்கேயே இருக்கலாம் என நம்பப்படுகிறது," என்று அமைச்சு கூறியது.