தெம்பனிஸ் தொகுதியை வரும் 2022ஆம் ஆண்டுக்குள் சிங்கப் பூரின் நடப்பதற்கும் சைக்கிள் ஓட்டுவதற்கும் ஏற்ற இரண்டாவது நகரமாக மாற்றி வடிவமைக்க உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது. இத்திட்டத்தில் சைக்கிள் பாதையின் நீளத்தை மும்மடங்காக அதிகரித்து சைக்கிள்ளோட்டி களுக்கு பாதுகாப்பான பாதையாக மாற்றுவதுடன் நடைபாதையை அகலப்படுத்தி பாதசாரிகளுக்குப் பாதுகாப்பான, வசதிமிக்க இடமாக தெம்பனிஸ் தொகுதியை உருமாற்ற ஆணையம் முடிவு செய்துள்ளது. அத்துடன், தெம்பனிஸ் சாலைகளை முதியோர்கள் பாது காப்பாக கடப்பதற்காக மறுவடி வமைக்கப்படுவதுடன் தடுப்பு களற்ற சாய்வுத் தளங்களை ஏற் படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஆணையம் கூறியது.
சைக்கிள் ஓட்ட வசதியாக தெம்பனிஸ் தொகுதி மாறும்
1 mins read
-

