கார் பயணிகளுக்கு கைரேகைப் பதிவு

கார் பயணிகளுக்கு கைரேகைப் பதிவு

1 mins read
06a170f9-b44b-4b04-967c-5d152fe4209b
-

துவாஸ், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகள் வழியாகச் செல்லும் கார் பயணிகள் விரைவில் தங் களது கட்டைவிரல் ரேகைகளை அங்குள்ள குடிநுழைவு முகப்பு களில் பதிவுசெய்ய வேண்டி இருக்கும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட அந்த 'பயோஸ்கிரீன்' பாதுகாப்புக் கட்டமைப்பு மூலம் அவ்விரு சோதனைச்சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்கு வருவோரின், சிங்கப்பூரைவிட்டு வெளியேறு வோரின் கட்டை விரல் ரேகைகள் பதிவு செய்யப்படும். தற்போது ரயில், பேருந்துப் பயணிகளுக்கும் லாரி போன்ற சரக்கு வாகனங்களுக்கும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வரு கிறது. அந்தச் சோதனை முயற்சி படிப்படியாக கார் பயணிகளுக் கும் விரிவுபடுத்தப்படும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் நேற்று அறிக்கை மூலம் தெரிவித்தது.

சோதனைச்சாவடிகள் வழியாகச் செல்லும்போது கார் பயணிகளும் இனி தங்களது கைகளின் கட்டைவிரல் ரேகைகளைப் பதிவு செய்யவேண்டும் என்பதால் குடிநுழைவு அனுமதி பெற சற்று கூடுதல் நேரம் ஆகலாம். படம்: சாவ் பாவ்