'சிங்கப்பூரின் பாதுகாப்பில் நிறுவனங்களுக்கும் பங்கு'

'சிங்கப்பூரின் பாதுகாப்பில் நிறுவனங்களுக்கும் பங்கு'

1 mins read
5cfdfb2f-2286-44a4-aa08-c36f480335b8
-

சிங்கப்பூரின் பாதுகாப்பில் நிறு வனங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்று கூறிய துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், வேலையிடங்களையும் ஊழியர் களையும் பயங்கரவாத மிரட்டல் களைச் சமாளிக்கும் வகையில் தயார்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மீளக்கூடிய ஆற்றலை வலுப் படுத்த உதவும் சமய நல்லிணக் கம், பரஸ்பர நம்பிக்கை, ஒருங் கிணைப்பு ஆகியவற்றை சமூ கத்தில் மேம்படுத்தவும் நிறு வனங்கள் உதவலாம் என்று அவர் சொன்னார். சிங்கப்பூரில் நேற்று நடை பெற்ற தேசிய பாதுகாப்பு மாநாட் டில் திரு டியோ பேசினார். "சாத்தியமான தாக்குதல் களைக் கண்டுபிடித்துத் தடுப் பதற்கு நமது பாதுகாப்பு அமைப் புகள் கடுமையாகச் செயல் பட்டுவருகின்றன. அதே சமயத்தில் சிங்கப்பூரும் சிங்கப் பூரர்களும் பாதுகாப்பாக இருப் பதற்கு சமூக ஆதரவு முக் கியம்," என்று தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரு மான திரு டியோ குறிப்பிட்டார். சிங்கப்பூரர்களை ஆயத்தப் படுத்தும் நமது முயற்சிகளுக்கு ஏதுவாக சிங்கப்பூர் நிறுவனங் களையும் தயார் செய்வது அவ சியம் என்றார் அவர்.

துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் நிறுவனங்கள் ஆற்ற வேண்டிய பங்கு குறித்து விவரித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்