உலகெங்கிலும் இன, சமயப் பூசல்கள் பொங்கி எழும் இன்றைய சூழலில், சிங்கப்பூரின் பல்வேறு சமூகங்களுக்கு இடையில் வலு வான நல்லுறவை வளர்ப்பது அதிமுக்கியம் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியிருக் கிறார். இதனால்தான் வெவ்வேறு சமய மக்களிடையில் புரிந்து ணர்வை வளர்ப்பது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நோக்கத்திற்காக, அனைத்து சமய அமைப்பு இளை யர் பிரிவை அமைக்கத் திட்டமிடு வதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்ததாக அவர் சொன்னார். ‚சமய, இன விவகாரங்கள் பூசலாக வெடிக்கக்கூடிய சாத் தியம் இருப்பதை நம்மைச் சுற்றி லும் நிகழும் சம்பவங்கள் காட்டு கின்றன என்று அனைத்து சமய அமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்த பிறகு அவர் செய்தியாளர் களிடம் கூறினார். இளையர்கள் கூடுதலாகக் கவனிக்கப்படவேண்டும் என்று திருவாட்டி ஹலிமா எடுத்துக் கூறினார். சமூக ஊடகப் பயன்பாட்டினால் இளையர்கள் பலதரப்பட்ட உந்துதல்களுக்கு இலக்காகக்கூடும்.
அனைத்து சமய அமைப்பின் தலைவர் திரு கி.கேசவபாணியும் (நடுவில்), கௌரவச் செயலாளர் திரு அமீரலி அப்திலியும் (இடமிருந்து இரண்டாவது) அதிபர் ஹலிமா யாக்கோப்புக்கு நினைவுபொருள் வழங்குகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

