கா. சண்முகம்: இன ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் கவனம்

கா. சண்முகம்: இன ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் கவனம்

1 mins read
630385a0-f812-46ee-a1b9-5739379b2a17
-

சிங்கப்பூரின் பல இன ஒருமைப் பாடு பயங்கரவாதத்திற்கு எதி ரான முக்கிய தற்காப்பு என்றும் அது கவனத்துடன் வளர்க்கப்பட வேண்டும் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண் முகம் நேற்று நாடாளுமன்றத்தில் கூறி னார். பயங்கரவாத மிரட்டலுக்கு எதிராக சிங்கப்பூரைப் பலப் படுத்துவது பற்றிய நாடாளு மன்றத் தீர்மானம் குறித்து திரு சண்முகம் பேசினார். பல இன ஒருமைப்பாடு என்ற அடிப்படைக் கொள்கையை நிலைநாட்டி, பயங்கரவாதம், தீவிரவாதச் சிந்தனை ஆகிய மிரட்டல்களைக் கடப்பாட்டோடும் உறுதியோடும் கையாளவேண் டும் என்று அவர் கூறினார். திரு கிறிஸ்டபர் டி சூசா, டாக்டர் இன்டான் அசுரா மொக் தார், திரு முரளி பிள்ளை, டாக்டர் டான் வீ மெங் ஆகிய நான்கு மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நாடாளுமன்றத் தீர் மானத்தைத் தாக்கல் செய்தி ருந்தனர். பயங்கரவாத மிரட்டலை எதிர்க்க சிங்கப்பூரை வலுப் படுத்துமாறு சக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் அரசாங்கத் திடமும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.