சிறப்பு உதவி தேவைப்படும் பிள்ளைகளுக்கு மேலும் ஆதரவு வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்து இருக்கிறார். சிறப்பு உதவி தேவைப்படும் பிள் ளைகளுக்கான ரெயின்போ சென்டர் யீஷூன் பார்க் பள்ளிக் கூடத்திற்கு நேற்று அதிபர் சென்றார். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஏறக் குறைய 10 ஆண்டு காலமாக பயி லும் 17 வயது டேனியல் இஷாக் அப்துல்லா என்ற பையனை அதிபர் சந்தித்து, அவரது ஓவியங்களை அவர் பார்வையிட்டார். ரெயின்போ நிலையத்தின் பணிகளைப் பாராட்டிய அதிபர், சிறப்பு உதவி தேவைப்படும் பிள்ளைகளுக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதிக ஆதரவு கிடைப்பதன் மூலம் இத்தகைய பிள்ளைகள் தாங்கள் சொந்தமாகவே மேம்படு வதற்குப் பதிலாக சமுதாயத்தின் ஓர் அங்கமாகவும் அவர்கள் திகழ முடியும் என்றார் அதிபர். சிறப்பு உதவி தேவைப்படக்கூடிய பிள்ளைகளைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் முன்ன தாகவே ஈடுபட்டு உரிய நடவடிக் கைகளை எடுப்பதால் நல்ல பலன் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் காட்டியிருப்பதாக திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.
அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று சிறப்பு உதவி தேவைப்படும் ரெயின்போ சென்டர் யீஷூன் பார்க் பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவர் களுடன் உரையாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

