உணவுக் கடைக்காரர்களுக்கு உதவ புதிய தகவல் மையம்

உணவுக் கடைக்காரர்களுக்கு உதவ புதிய தகவல் மையம்

1 mins read
c23cc8f3-a5e4-4fca-a6c1-6f499725bdae
-

உணவங்காடி தொடங்க விரும்பு வோருக்கும் இப்போது உணவுக் கடை வைத்துள்ளோருக்கும் அதிக உதவிகள் கிடைக்கவிருக் கின்றன. எல்லா தகவல்களையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் தகவல் மையம் அமைக்கப்படுவது டன் உற்பத்தித்திறன் மானியமும் அவர்களுக்குக் கிடைக்க வாய்ப் புள்ளது. உணவங்காடி வர்த்தகம், உணவங்காடி ஒன்றை ஏலக் குத்தகை எடுப்பது, உணவு சுகா தாரம் பற்றிய பயிற்சி வகுப்பு களுக்கு எங்கு செல்வது போன்ற தகவல்களை தோ பாயோ வீட மைப்பு வளர்ச்சிக் கழக மையத்தில் அமைந்துள்ள மறுசீரமைக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையத்தில் பெறலாம்.

தேசிய சுற்றுப்புற வாரியத்தின் நிதியுதவியுடன் சமையலறை தானியங்கி சாதனத்தை வாங்கும் வகையில், மானியம் பெறுவதற்கும் உணவுக் கடைக்காரர்கள் விண் ணப்பிக்கலாம். அந்தச் சாதனத்திற்கான விலையில் 80 விழுக்காட்டை உணவுக் கடைக்காரர்கள் திரும்பப் பெற முடியும். இந்த வகையில் மூன்றாண்டு காலத்திற்குள் $5,000 வரை அவர்கள் திரும்பப் பெற முடியும். 'ஓஎஸ்ஐஎஸ்சி' எனப்படும் தகவல், சேவை மையத்தை சுற்றுப் புற, நீர்வள மூத்த துணை அமைச் சர் டாக்டர் ஏமி கோர் நேற்று தொடங்கி வைத்தார். இவ்வாண்டு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட உற்பத்தித்திறன் மானியத்தையும் டாக்டர் கோர் நேற்று அறிமுகம் செய்தார்.