பங்ளாதேஷில் அடைக்கலம் புகுந் திருக்கும் மியன்மாரின் ரோஹிங்கியா அகதிகளுக்கு சிங்கப்பூர் சுமார் $270,000 மதிப்புள்ள உதவி களை வழங்குகிறது. அந்த உதவி களை வழங்குவதற்காக சிங்கப்பூர் ஆயுதப்படைகளின் குழு நேற்று பங்ளாதேஷ் போய்ச் சேர்ந்தது. சிங்கப்பூர் ஆயுதப்படையின் KC-135R விமானம் போர்வைகள், உணவு, மருத்துவப் பொருட்கள், மருந்துகள், விளக்குகள் முதலான பல நிவாரணப் பொருட்களுடன் பங்ளாதேஷின் சிட்டகாங் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த முதல்கட்ட உதவிப் பொருட்களை சிங்கப்பூர் அரசாங் கமும் மெர்சி ரிலிஃப் என்ற அரசு சாரா உதவி அமைப்பும் வழங்கி இருக்கின்றன. உதவிப் பொருட் களுடன் தற்காப்பு மூத்த துணை அமைச்சர் மாலிக்கி ஓஸ்மான் பங்ளாதேஷ் சென்றார். அவர் அந்த நிவாரணப் பொருட்கள் சிட்டகாங் வட்டார தளபதியிடம் ஒப்படைக்கப்படு வதைப் பார்வையிட்டார். இன்று இரண்டாவது கட்ட உதவிப் பொருட்களுடன் சிங்கப்பூர் விமா னப்படை பங்ளாதேஷ் செல்லும். மியன்மாரின் ராக்கைன் மாவட் டத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் முதல் சுமார் 500,000 ரோஹிங்கியா அகதிகள் தப்பி ஓடியிருக்கிறார் கள் என்று மதிப்பிடப்படுகிறது.
தற்காப்பு மூத்த துணை அமைச்சர் டாக்டர் முகமது மாலிக்கி பின் ஓஸ்மான் பங்ளாதேஷ் சென்று சிட்டகாங் விமான நிலையத்தில் பங்களாதேஷில் உள்ள மியன்மார் அகதிகளுக்கு சிங்கப்பூர் வழங்கிய உதவிப் பொருட்களை, உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அதற்கு முன்னதாக அவர் பங்ளாதேஷின் சிட்டகாங் வட்டார ஆணையர் முகமது அப்துல் மன்னன், (டாக்டர் ஓஸ்மானுக்கு இடது), சிங்கப்பூர் குடியரசு தூதரக அதிகாரி வில்லியம் சிக் ஆகியோர் முன்னிலையில் உரையாற்றினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

