கடலில் விழுந்த விமானத்தைக் கயிறு கட்டி இழுத்தனர்

கடலில் விழுந்த விமானத்தைக் கயிறு கட்டி இழுத்தனர்

1 mins read
ac120273-bed6-4641-bb7d-de5517b570c2
-

ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டின் வர்த்தகத் தலைநகரும் துறைமுக நகருமான அபிஜான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சரக்கு விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியதில் நால்வர் உயிரிழந்தனர். இடி, மின்னலுடன் கடுமையான புயலும் மழையும் இருந்ததால் அந்த விமானம் கடலில் விழுந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அலைகளால் அடித்து வரப்பட்டு கரையோரம் வந்த அந்த விமானத்தை மீட்புப் படையினர் கயிறு கட்டி இழுத்துக் கரைசேர்த்தனர். மாண்டவர்களில் இருவரது உடல்கள் உடனடியாக மீட்கப்பட்டதாகவும் மற்ற இருவரின் உடல்கள் உடைந்த விமானத்தில் இருப்பது தெரிந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சொன்னதாக 'ராய்ட்டர்ஸ்' செய்தி கூறியது. பிரெஞ்சு ராணுவத்திற்குத் தேவையான சரக்குகளை அந்த விமானம் ஏற்றிச் சென்றதாகவும் அதில் பத்துப் பேர் பயணம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்