ப.பாலசுப்பிரமணியம்
டௌன்டவுன் புதிய தடம் 3ன் நேற்றைய பொது வரவேற்பு தினத்தில் பங்கேற்ற பயணிகளின் பயணம் சுமூகமாக அமைய வில்லை. டௌன்டவுன் தடம் 2ல் நண்பகலில் ஏற்பட்ட சேவைத் தடங்கலால் தடம் 3ல் பயணம் செய்தோர் பாதிக்கப்பட்டனர். டௌன்டவுன் தடம் 2ல் உள்ள ஹில்வியூ நிலையத்தில் ரயிலில் பழுது ஏற்பட்ட காரணத்தால் புக்கிட் பாஞ்சாங் நிலையத்துக்கும் பியூட்டி வோர்ல்ட் நிலையத்துக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ரயில் சேவை இடம்பெற வில்லை. டௌன்டவுன் ரயில் சேவையை நடத்தும் எஸ்பிஎஸ் டிரான்சிட் சேவைத் தடங்கல் குறித்து சமூக ஊடகங்களில் பகல் 1.04க்கு அறிவித்தது. "ஹில்வியூ நிலையம் அருகே ரயில் பழுதடைந்ததால் ரயில் சேவை தடைபட்டது. பழுதடைந்த ரயில் பாதையிலிருந்து அகற்றப்பட் டதும் 40 நிமிடங்கள் கழித்து பிற் பகல் 1.20க்கு சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்பின," என்று எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் மூத்த துணைத் தலைவர் தெரிவித்தார். ரயில் பழுதுக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
உபி ரயில் நிலையத் தில் பயணிகள். ஃபோர்ட் கேனிங்கி லிருந்து எக்ஸ்போ வரை 21 கிலோ மீட்டர் நீளமுள்ள டௌன் டவுன் தடம் 3ல் 16 நிலை யங்கள் உள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

