எம்ஆர்டி நிலையத்திலிருந்து வெளியேறி ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதையில் பயணத் தைத் தொடர்பவர்கள் இரண்டா வது முறையும் புதிதாக பயணம் செய்பவர்களைப் போன்று கட் டணம் செலுத்த வேண்டியதிருக் காது. இந்த நடைமுறை விரை வில் செயல்படுத்தப்படும் என்று கூறிய போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், பயணம் செய் யும் தொலைவுக்கு ஏற்ற பயணக் கட்டண மாற்று விதிகள் ஆய் வுக்கு உட்படுத்தப்பட்டு நடை முறைப்படுத்தப்படும் என்றார். டௌன்டவுன் மூன்றாவது பாதையில் ரயில் சேவையை நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தபோது இந்தத் தகவலை அவர் தெரிவித்தார்.
"நமது ரயில் கட்டமைப்பு அடர்த்தியாவதால் வெவ்வேறு பாதைகளில் உள்ள எம்ஆர்டி நிலையங்கள் அருகருகே அமை யும்," என்று கூறிய திரு கோ, "சில வேளைகளில் நேரத்தைச் சேமிப்பதற்காக பயணிகள் ஒரு நிலையத்திலிருந்து வெளியேறி வேறொரு நிலையத்துக்கு நடந்து சென்று பயணத்தைத் தொடரலாம். புக்கிட் பாஞ்சாங், நியூட்டன், தெம்பனிஸ் ஆகிய நிலையங்கள் தவிர மற்றவற்றில் தற்போதைய எம்ஆர்டி பயணக் கட்டண அமைப்பு அத்தகைய பயணங்களை ஒரே பயணமாக கணக்கில் கொள்ளும் விதத்தில் இல்லை," என்றார். மற்ற நிலையங்களில் வேறு எம்ஆர்டி பாதைகளில் பயணம் செய்வோர் இரண்டாவது முறையும் புதிதாக சேவையைத் தொடங்குவது போன்ற கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இதன் தொடர்பில் பொதுப் போக்குவரத்து மன்றம் மாற்றுப் பயண விதிகளை மறு ஆய்வு செய்து பயணிகளுக்கும் வரி செலுத்துபவர்களுக்கும் நியாய மான கட்டணம் நிர்ணயிக்கும் என்று திரு கோ சொன்னார்.
அமைச்சர் கோ பூன் வான் (நடுவில் சாம்பல் நிறச் சட்டை), அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் (வெளிர் ஊதா நிறச் சட்டை), நாடாளுமன்ற உறுப்பினர் பே யாம் கெங் ஆகியோர் புதிய டௌன்டவுன் மூன்றாவது பாதையில் நேற்று பயணம் செய்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

