சிறப்பு உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு நேரடி வேலை அனுபவம்

சிறப்பு உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு நேரடி வேலை அனுபவம்

1 mins read
553725a6-aa18-45fa-97c3-fb367ae14ab9
-

எல்லாரையும் உள்ளடக்கும் வேலை யிடத்தைச் சாதிக்க ஊக்கமூட்டும் ஒரு நடவடிக்கையாக, சிறப்பு உதவி தேவைப்படுவோருக்கான சங்கத் துடன் சேர்ந்து 10 வகுப்புகளைக் கொண்ட நேரடி வேலைப் பயிற்சி செயல்திட்டம் ஒன்றை இஸ்தானா தொடங்கியிருக்கிறது. சிறப்பு உதவி தேவைப்படும் மாணவர்கள் இந்தத் திட்டத்தின்படி அதிபர் மாளிகையில் வேலை அனுபவத்தைப் பெறுவர். பத்து பயிற்சி வகுப்புகளும் 32 மணி நேரம் நடக்கும். அந்த வகுப்புகளில் சேர்ந்து மாணவர்கள் சமையல்கலை, தோட் டக்கலை முதலான பலவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள்.

சிறப்பு உதவி தேவைப்படு வோருக்கான சங்கத்தின் காத்தோங் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த உயர் நிலை நான்காம் வகுப்பு மாணவர்கள் ஏழு பேர் இஸ்தானாவில் நேரடி பயிற்சி அனுபவத்தைப் பெறுகிறார் கள். அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று அத்தகைய பயிற்சி மாணவர் களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடினார். இத்தகைய நேரடிப் பயிற்சி திட்டத்தில் தான் மிகவும் நாட்டமாக இருப்பதாக அதிபர் குறிப்பிட்டார். சிறப்பு உதவி தேவைப்படும் மாண வர்கள் அதிபரின் அதிகாரபூர்வ தங்கும் இடத்தில் இத்தகைய நேரடிப் பயிற்சிகளில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. நல்ல வழிகாட்டுதல்கள் இருந் தால் இத்தகைய சிறப்பு உதவி தேவைப்படும் மாணவர்கள் பயனுள்ள வழிகளில் தொண் டாற்ற முடியும் என்று அதிபர் தெரிவித்தார்.

அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு உதவி தேவைப்படும் மாணவர்களை அவர்களின் வேலையிடத்தில் சந்தித்து உரையாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்