இந்த ஆண்டு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆர்ச்சர்ட் சாலையில் இடம்பெறவுள்ளள ஒளி யூட்டின் முன்னோட்டக் காட்சியின் படம் இது. இவ்வாண்டு கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ஒளிக்கதிர்களை பிரதிபலிக்கும் சுரங்க நடைபாதை களும் பல வண்ண ஒளி நூலிழை களால் அலங்கரிக்கப்பட்ட மரங் களையும் கொண்டதாக இருக்கும். தங்ளின் கடைத் தொகுதியில் தொடங்கி பிளாசா சிங்கப்பூரா வரை கிட்டத்தட்ட 2.88 கிலோ மீட்டர் தூரம் இந்த ஒளி அலங் காரங்கள் இருக்கும். சிங்கப்பூரர்களுக்கும் வெளி நாட்டு வருகையாளர்களுக்கும் முடிவில்லா ஆச்சரியம், ஆனந்தம், அற்புதம் ஆகியவற்றை வழங்கும் விதத்தில் நவம்பர் 11ஆம் தேதி தொடங்கும் இந்த ஒளியூட்டு விழா அமையும் என்று கூறப்படு கிறது. இதில் சிறப்பு அம்சம் என்ன வெனில் எப்பொழுதும் போலல் லாமல் இவ்வாண்டிற்கான ஒளி யூட்டு விழா பிற்பகல் 3.00 மணிக்கே தொடங்கிவிடும் என்று சொல்லப்படுகிறது. இவ்வாண்டு கிறிஸ்மஸ் கொண்டாட்டடத்தின் கருப்பொருள் 'முடிவில்லா ஆச்சரியம்' என்பது குறிப்பிடத்தக்கது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஆச்சரியம், ஆனந்தம், அற்புதம்
1 mins read
-

