'பயங்கரவாத தாக்குதலின்போது ஒவ்வொரு குடிமகனின் செயலும் மிக முக்கியமானது'

'பயங்கரவாத தாக்குதலின்போது ஒவ்வொரு குடிமகனின் செயலும் மிக முக்கியமானது'

2 mins read
344b782d-8204-4a2c-9822-442c33dac1fc
-

பயங்கரவாதத் தாக்குதல் நிகழும் பட்சத்தில் என்ன செய்ய வேண் டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் கூறியிருக்கிறார். மக்கள் விழிப்புடனும் எச்சரிக் கையுடனும் இருந்தால் அவர்களால் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் தடுத்துவிட முடியும் என்று அவர் கூறினார். "பயங்கரவாதச் சம்பவத்தில் மாட்டிக்கொண்டால் ஓடிவிட, ஒளிந்துகொள்ள, உதவிக்கு குரல் கொடுக்க உங்களுக்குத் தெரிய வேண்டும்," என்றார் அவர். திரு டியோ நேற்று 'எக்சர்சைஸ் நார்த்ஸ்டார்' என்ற பாவனைப் பயிற்சியைப் பார்வையிட்டார். அந்த 4 மணி நேர பயிற்சி மண்டாயில் இருக்கும் உள்துறை குழு உத்தி நிலையத்தில் நடந்தது.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 500 அதிகாரிகள் அதில் கலந்துகொண்டனர். ஒரு கடைத்தொகுதியும் பேருந்து சந்திப்பு நிலையமும் வீடு களும் சேர்ந்து அமைந்திருக்கும் கட்டடம் ஒன்றில் இரண்டு கார் குண்டுகள் வெடித்ததாகச் சோடிக் கப்பட்டு அந்தப் பயிற்சி நடந்தது. இத்தகைய பயிற்சிகள் பல்வேறு அமைப்புகளின் ஒருமுகப்பாட்டை பரிசோதிக்க உதவுகின்றன என்று துணைப் பிரதமர் தெரிவித்தார். பயங்கரவாத தாக்குதல் நடந்த பிறகு பழைய நிலையை வேகமாக கொண்டுவர இந்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்றார் அவர். சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படை தலைமையில் நடந்த அந்தப் பயிற்சியில் பல்வேறு அமைப்புகளும் கலந்துகொண்டன. எக்சர்சைஸ் நார்த்ஸ்டார் பயிற்சி இத்துடன் 10வது தடவை யாக நடக்கிறது. நேற்று நடந்த பயிற்சி இரண்டாவது கட்டமாகும். முதல்கட்ட பயிற்சி சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் அக்டோபர் 17ஆம் தேதி நடந்தது.

நார்த்ஸ்டார் பயிற்சியின்போது குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்