கலந்துறவாடல் மிக முக்கியம்

கலந்துறவாடல் மிக முக்கியம்

2 mins read
7a06025a-96a1-4c97-b824-82a908a6f6d5
-

கோல்டுஹில் அவென்யூவின் ஒரு மூலையில், பங்களாக்கள், தரை வீடுகளுக்கு மத்தியில் அமைந்து உள்ள நிலப்பகுதியில், எல்லா வகையான பழங்களும் காய்கறி களும் வளர்கின்றன. பழங்களும் காய்கறிகளும் அறுவடை செய்யப் பட்டு, அண்டை வீட்டாருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. நேற்று இவ்விடத்திற்கு வரு கையளித்த நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், கம்போங் உணர்வு எனப்படும் கிராமிய உணர்வு நிலைத்திருப்பதாகவும் சிங்கப்பூர் முழுவதிலும் இந்த வலுவான சமூக உணர்வு வளர்க்கப்படவேண் டும் என்றும் கூறினார்.

"அந்த அக்கம்பக்கத் தோழமை, அந்தச் சமூக உணர்வு, உள்ளத்தால் உணரக்கூடியது... ஒருவர்மீது மற்றவர் அக்கறை காட்டும் இந்த உணர்வு சக்தி வாய்ந்த சிந்தனையாகும். மக்கள் கலந்துறவாடாவிட்டால் இது சாத்தியமாகாது," என்று தஞ் சோங் பகார் குழுத்தொகுதியின் மோல்மென்-கேர்ன்ஹில் பகுதிக்கு அளித்த சமூக வருகையின் முடி வில் திரு ஹெங் கூறினார். கேர்ன்ஹில் சமூக மன்றத்தில் குடியிருப்பாளர்களுடன் நடந்த கலந்துரையாடலில் பேசிய திரு ஹெங், மக்களை ஒன்றுகூடச் செய்யும் இயல்பான காரணத்தை உருவாக்கித் தருவதில் பொது வசதிகள் முக்கிய பங்காற்றுவதா கக் கூறினார்.

மோல்மென்-கேர்ன்ஹில் தொகுதியில் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் (வலமிருந்து 2வது) நேற்று தொடங்கி வைத்த பற்றுச்சீட்டு திட்டம் மூலம் அத்தொகுதியின் வசதி குறைந்தவர்கள் தங்களிடம் உள்ள $2 பற்றுச்சீட்டை இத்திட்டத்தில் பங்கேற்கும் கடைகளில் கொடுத்து உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். வலக் கோடியில் இருப்பவர் தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங். படம்: சாவ் பாவ்