சிங்கப்பூர் எழுத்தாளார் விழா வரும் வெள்ளிக்கிழமை தமிழ் மணத்தோடு தொடங்க உள்ளது. 'அறம்' என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா வின் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ கத்தின் பெயர்பெற்ற வில்லுப்பாட்டு கலைஞர் திருமதி பாரதி திருமக னின் வில்லுப்பாட்டும் இடம்பெறும். சனிக்கிழமை நடைபெறவுள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சியின் முன் னோட்டமாக இந்த அங்கம் இடம் பெறுகிறது. வெள்ளி இரவு 8 மணிக்கு நவீன இசையுடன் தமிழ் கவிதை களைச் சுவைக்கலாம். தி ஆர்ட்ஸ் ஹவுஸ்ஸில் உள்ள பிளே டென் அரங்கில் இடம்பெறும் இந்நிகழ்ச்சியில் பாரதியார், பாரதி தாசன் கவிதைகளுடன் சிங்கப் பூரின் மூத்த எழுத்தாளர்கள் சிங்கை முகிலன், அமலதாசன், முருகதாசன், வளரும் கவிஞர்கள் இளஞ்சேரன், ஹரிணி போன் றோரின் கவிதைகளை 'ஜாஸ்', 'ராக்' இசையுடன் கேட்கலாம்.
நிகழ்ச்சிக்குக் கட்டணம் $10 தான். 10 நுழைவுச்சீட்டுகளுக்கு மேல் வாங்கினால் 30% கழிவு உண்டு. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை நவம்பர் 4ஆம் தேதி விக்டோரியா அரங்கில் இரவு 7 மணிக்கு தமிழ் முரசின் பிரம் மாண்ட நிகழ்ச்சி மேடையேறுகிறது. ரசனையைத் தூண்டும் நாடகம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம் என நான்கு மாறுபட்ட தமிழ்க் கலைப்படைப்பு கள் ஒன்றன்பின் ஒன்றாக விக் டோரியா அரங்கில் களைகட்டும். ஒரே மேடையில் இந்த நான்கு வித படைப்புகளையும் கண்டு களிக்க கட்டணம் $20தான். நுழைவுச்சீட்டுகளை SISITIC இணையத்தளத்தில் பெறலாம்.
'ராகாஜாஸ்' இசைக் குழுவின் 29 வயது ராகவேந்திரன் ராஜசேகரனின் (வலக்கோடி) கைவண்ணத்தில் உருவான பாடல்கள் துடிப்புமிக்க 'ஜாஸ்' இசை, பாரம்பரிய கர்நாடக இசை, மனதை மயக்கும் இந்துஸ்தானி இசை என மூன்று வித இசையைக் கொண்டிருக்கும். உள்ளூர் பாடகர் சுதாசினி (இடக்கோடி) பாடல்களுக்குக் குரல் கொடுக்கிறார். படம்: திமத்தி டேவிட்

