சாங்கி விமான நிலையத்தின் புதிய நான்காவது முனையம் நேற்றுக் காலை முதல் செயல்பட தொடங்கியுள்ளது. சிங்கப்பூர் விமானப் போக்குவரத்தின் வர லாற்றில் இது ஒரு முக்கிய மைல் கல் என்று கூறப்படுகிறது. விமான நிலையத்தின் செயல் பாடுகள் தங்கு தடையின்றி சுமூக மாக நடைபெற்றன. முதல் விமா னம் ஹாங்காங்கிற்குப் புறப்பட விருந்த நிலையில் பயணிகள் காலை 4 மணி முதல் புறப்பாட்டு கூடத்திற்கு வரத் தொடங்கினர். தங்களின் பயணத்தை சுயமாகவே உறுதி செய்யும் (செக்-இன்) முறையை பயணிகள் பயன்படுத்தினர்.
விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு உதவ அந்தப் பகு திகளில் நிறுத்தப்பட்டிருந்தனர். புதிய முனையத்தில் முதன் முதலாக 'கெத்தே பசிபிக்' விமா னம் தரையிறங்கியும் புறப்பட்டும் சென்றது. ஹாங்காங்கிலிருந்து 'சிஎக்ஸ்659' விமானம் காலை 5.40 மணிக்குத் தரையிறங்கியது. 'சிஎக்ஸ்650' விமானம் காலை 6.50 மணிக்கு புதிய முனையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு புறப்பட் டுச் சென்றது. பயணத்தை உறுதி செய்யும் முறையும் பயணப் பெட்டிகளை வைக்கும் அனுபவமும் குடிநுழைவு, பாதுகாப்புச் சோதனை முறைகளும் சீரானதாகவும் வியக்கவைக்க வைக்கும் அளவிற்கு இருந்ததாக வும் முதல் விமானத்தில் புறப்பட்ட பயணிகள் கூறினர்.
தானியக்க 'செக்-இன்' முறையைப் பயன்படுத்தும் புதிய முனையத்தின் முதல் கட்ட பயணிகள். 250 பயணிகளோடு 'கெத்தே பசிபிக்' விமானம் நேற்றுக் காலை ஹாங்காங்கிற்கு புறப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

