அமெரிக்காவின் நியூயார்க் நக ரில் ஒரு சிறிய ரக லாரி ஒன்றை 100 கி.மீ. வேகத்தில் ஓட்டிவந்த ஒருவர், நடையர்கள் மீதும் சைக் கிளோட்டிகள் மீதும் தன் வாக னத்தை ஓட்டி எட்டு பேரைக் கொன்றுவிட்டார். இதர 11 பேர் காயம் அடைந்தனர். ஒரு பள்ளிப் பேருந்து மீதும் அவர் தன் வாடகை வாகனத்தை மோதினார். அந்த சந்தேக நபரை துப்பாக்கியால் சுட்டு போலிசார் உயிரோடு பிடித்தனர். சிறிய லாரிஓட்டி உஸ்பெகிஸ் தானைச் சேர்ந்த செஃபுளோ சாய்பாவ், 29, என்பவர். 2010 முதல் அமெரிக்காவின் புளோ ரிடா மாநிலத்தில் தம்பா என்ற நகரத்தில் அவர் வசித்துவந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே, சந்தேக நபர் ஓட்டி வந்த சிறிய லாரியில் ஒரு குறிப்பு இருந்ததாகவும் ஐஎஸ் அமைப்பின் சார்பில் தாக்குதலை தான் நடத்தியதாக அதில் அவர் தெரிவித்ததாகவும் ஊடகத் தக வல்கள் கூறின. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2011 செப்டம்பர் 11ஆம் தேதி அரங்கேற்றப்பட்ட அல்= காய்தா தாக்குதலுக்குப் பிறகு இதுதான் படுமோசமான தாக்கு தல் என்று தெரிவிக்கப்படுகிறது. நியூயார்க் நகரில் இருக்கும் உலக வர்த்தக மையத்துக்கு அருகே உள்ள கூட்டமிகு பாதை யில் நடத்தப்பட்ட இத்தாக்கு தலைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்நாட்டு பாது காப்புத் துறைக்கு ஓர் உத்தர வைப் பிறப்பித்தார்.
நியூயார்க் நகரில் பயங்கரவாதச் சம்பவத்தை அரங்கேற்ற பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வாகனத்தை அதிகாரிகள் சோதனையிடுகிறார்கள். (உள்படம்) சிறிய லாரியை ஓட்டிவந்தவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் சைஃபுல்லா சாய்பாவ். படங்கள்: ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ்

