மரம் நடும் நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் லூங்

மரம் நடும் நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் லூங்

2 mins read
d5e05ed9-bfb6-46d5-9deb-e63702ff773d
-

அங் மோ கியோ குழுத் தொகுதி, செங்காங் வெஸ்ட் தனித் தொகு தியை சேர்ந்த குடிமக்களுடன் பிரதமர் லீ சியன் லூங் நேற்று மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங் மோ கியோவில் உள்ள லக்சஸ் ஹில்ல் பார்க்கில் மொத்தம் ஒன்பது செடிகள் நடப்பட்டன. மேலும், சிலர் தோட்டச் செடிகளுடன் அங்கு வந்திருந்தனர். சிறார்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டியும் நடத்தப்பட்டது. "மரங்களை நடுவதைத் தாண்டி, அவைகளைப் பரா மரித்து பசுமையைக் காத்து சிங்கப்பூரைத் தோட்ட நகர மாக்கும் இலக்கை அடைய குடிமக்கள் இணைந்து பாடுபடு வர்" என அங் மோ கியோ நாடா ளுமன்ற உறுப்பினர் இந்தான் அஸுரா மோக்தார் நம்பிக்கை தெரிவித்தார்.

லக்சஸ் ஹில்ஸ் பார்க் ஒரு முன்னாள் ரப்பர் தோட்டமாகும். அதற்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசிய பூங்கா கழகம் சில ரப்பர் மரங்களை அங்கு நட்டுள்ளது என பிரதமர் லீ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார். "சிங்கப்பூர் பசுமையான சுற்றுச்சூழலை பல காலமாக அனுபவித்து வந்துள்ளது. அதனால் நாமும் பசுமை சிந்தனைப் போக்கை கொண் டிருக்க வேண்டும். நீடித்து நிலைத்திருக்கக் கூடிய தொழில் நுட்பங்களுடன் சூரிய மின் தகடுகள், வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளில் 'எல்இடி' விளக்குகள் ஆகிய வற்றை பொருத்துகிறோம். இவை சிங்கப்பூர் வரும் ஆண்டு களில் அழகு மிகுந்த நாடாக இருக்க உதவும்," என்றார் அவர்.

மரம் நடும் விழாவில் பிரதமர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்