இந்திய பண மதிப்பிழப்பு நடவடிக்கை

இந்திய பண மதிப்பிழப்பு நடவடிக்கை

1 mins read
3e2dd6a1-e943-4070-9f75-b8179911a448
-

இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என்று பிரதமர் மோடி அறி வித்தார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ரொக்கப் பணத் திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பணப் புழக்கம் குறைந்தது. வங்கியிலுள்ள தங்களது பணத்தை எடுக்கவும் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நோட்டு களை மாற்றவும் மக்கள் மணிக் கணக்கில் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. அது போன்ற சம்பவங்களில் பலர் மாண்டதாக ஊடகச் செய்திகள் கூறின. புழக்கத்தில் இருந்த பணம் திடீரென்று ஒழிக்கப்பட்டதால் ஏரா ளமான சிறுதொழில்கள் மூடப் பட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டதாவும் பழைய நிலை திரும்ப சில மாதங் கள் ஆனதாகவும் அச்செய்திகள் தெரிவித்தன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நேற்றைய தினத்தை கறுப்பு தின மாக கடைப்பிடித்தன. காங்கிரஸ் தலையிலான எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தோர் கறுப்பு தினத்தை கடைப்பிடிக்கும் விதமாக கறுப்புச் சட்டை அணிந்து கண்டன ஆர்ப் பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய கறுப்பு தின ஆர்ப்பாட்டம். படம்: தமிழக ஊடகம்