இந்தோனீசியாவின் சில பகுதிகளில் நேற்று பிற் பகலில் பெருமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டதை உணர்ந்த போகோர் பேரிடர் நிர்வாக முகவை வாகனமோட்டிகளுக்கு ஓர் எச்சரிக் கையை விடுத்துள்ளது. மேற்கு ஜாவா, போகோர், பங்காங் சுற்றுலாப் பகுதி போன்றவற்றில் பயணம் செய்யும் வாகன மோட்டிகள் மலைப் பாதைகளில் செல்லும்போது அதிக கவனத்துடன் நடந்துகொள்ளுமாறு அந்த முகவை தெரிவித்துள்ளது.
சிசாருவா மாவட்டத்தில் நேற்று பல மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதி களில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு மாற் றப்பட்டனர். வலுவிழந்த குன்றுப் பகுதிகளில் எந்நேரமும் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்று முகவை எச்சரித்தது. எனவே மழை பெய்யும்போது மேட்டுப் பகுதிகளில் வாகனங்களைச் செலுத்து வோர் இயன்றவரை அந்தப் பயணத்தை நிறுத்தி விட்டு ஓரமாக ஒதுங்கலாம் என்றும் அது ஆலோசனை தெரிவித்துள்ளது.
பேரிடர் அபாயம் காரணமாக சிலிவுங் ஆற் றின் கரையோரம் வசிக்கும் ஜகார்த்தா குடி யிருப்பாளர்கள் எந்த நேரமும் வெள்ளத்தை எதிர் நோக்கலாம் என்றும் எனவே முன்கூட்டியே அவர் கள் பத்திரமான பகுதிக்குச் செல்லலாம் என்று முகவை கூறியுள்ளது. மேற்கு ஜாவா மாநிலத்தில் உள்ள பாண்டுங் நகர வீதி ஒன்றில் கடையைச் சுற்றி மழை நீர் தேங்கியது. இருப்பினும் கடை மூடப்படவில்லை. அதில் அமர்ந்து இருப்போரின் விளையாட்டும் நின்றபாடில்லை. கடையே மூழ்கினாலும் பரவாயில்லை என்று இவர்கள் விளையாட்டில் மூழ்கி உள்ளனர். படம்: ஏஎஃப்பி

