அதிபர் ஹலிமா: முன்னாள் கைதிகளை சமூகத்துடன் ஒருங்கிணைக்க ஆதரவு தர வேண்டும்

அதிபர் ஹலிமா: முன்னாள் கைதிகளை சமூகத்துடன் ஒருங்கிணைக்க ஆதரவு தர வேண்டும்

2 mins read
2cc273ef-00bc-41bc-aa94-352795cfb23e
-

சுதாஸகி ராமன்

முன்னாள் கைதிகளை மீண்டும் சமூகத்துடன் ஒருங்கிணைத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அவர்களின் குடும்பத்தினர், நிறு வனங்களின் முதலாளிகள், சமூக பங்காளிகள் போன்றோர் ஆதர வளிக்க வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் வலியுறுத்தி யுள்ளார். இந்து அறக்கட்டளை வாரியத் தின் போதைப் புழங்கிகளுக்கான மறுவாழ்வு இல்லமான 'ஆஷ்ரம்' இல்லத்தை நேற்று பார்வையிட்ட அதிபர், அவர்கள் வாழ்க்கையில் முன்னேற மறு வாய்ப்பு அளிப்பதன் முக்கியத்துவம் பற்றிக் கூறினார். "அவர்களின் திறன்களை மேம் படுத்தி சமூகத்துடன் ஒருங் கிணைக்கும் கட்டமைப்பை 'ஆஷ்ரம்' இல்லம் கொண்டிருப்பது பாராட்டக்கூடியது," என்று அதிபர் குறிப்பிட்டார்.

புதிய திறன்களைத் தனது நட வடிக்கைகள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றின் மூலம் கற்றுக் கொடுத்து சமூகத்துடன் கைதி களை ஒருங்கிணைக்கும் நோக்கில் 'ஆஷ்ரம்' போதையர் மறுவாழ்வு இல்லத்தை வாரியம் கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. இதுவரை, 800 முன்னாள், இன்னாள் சிறைக் கைதிகளுக்கு இல்லம் புகலிடமாகத் திகழ்ந்து அவர்களை கரையேற்றியுள்ளது. அதன் குடியிருப்பாளர்களுக்கு உளவியல் ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் வழிகாட்டுதலை 'ஆஷ்ரம்' தருகிறது. அவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வியில் ஆதரவளிக்கும் விதத் தில் பிள்ளைகளுக்கு நேற்று காலை பற்றுசீட்டுகளும் வழங்கப் பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிபர் பிள்ளைகளுக்கு அவற்றை வழங்கினார். தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் என இல்லத் தில் நடந்த நிகழ்ச்சியில் மொத்தம் 39 பிள்ளைகள் $150 மதிப்புள்ள பற்றுசீட்டுகளைப் பெற்றனர். கடந்த 2015 ஆண்டிலிருந்து இந்த பற்றுசீட்டுகளை ஆண்டுதோறும் 'ஆஷ்ரம்' வழங்கிவருகிறது. இம்முறை முதல்முறையாக தனது சமூக பங்காளியான செம்ப வாங் தொகுதியில் வசிக்கும் 12 பிள்ளைகளுக்கும் இல்லம் பற்று சீட்டுகளை அளித்தது. போதைப் புழக்கத்தால் சிறைக்குச் சென்ற 57 வயது மோகனராஜா மாரியப்பன் ஒற்றை பெற்றோராக தம் இரு பிள்ளை களையும் வளர்த்து வருகிறார்.

முன்னாள் கைதியின் பிள்ளைகளுக்கு பற்றுச்சீட்டுகளை வழங்கிய அதிபர் ஹலிமா யாக்கோப், பின்னர் திரு மோகனராஜாவின் மகளை கட்டி அணைக்கிறார். படம்: பெரித்தா ஹரியான்