ஜூ கூன் நிலைய ரயில் மோதல்: சமிக்ஞை சாதன நிறுவனம் நன்கு செயல்பட்டிருக்கலாம்

ஜூ கூன் நிலைய ரயில் மோதல்: சமிக்ஞை சாதன நிறுவனம் நன்கு செயல்பட்டிருக்கலாம்

1 mins read
448b32cf-29c1-48ae-9015-d70ef2dbdccc
-

கிழக்கு-மேற்கு ரயில் வழித் தடத்திற்கான புதிய சமிக்ஞை முறையை வழங்கும் நிறுவனம் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கலாம் என்று போக்கு வரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று கருத்து தெரி வித்தார். கிழக்கு=மேற்கு ரயில் தடத் தில் சென்ற வாரம் ஒரு ரயில் மோதல் சம்பவம் நிகழ்ந்தது. அந்த வழித்தடத்தில் 'துவாஸ் மேற்கு விரிவாக்கம்' என்ற ஒரு சிறு பகுதியில் தனது முறையைச் சோதித்துப் பார்க்கும் சவால்மிக்க பொறுப்பு பிரான்ஸ் நாட்டின் 'தாலஸ்' என்ற நிறுவனத்திடம் ஒப்படைக் கப்பட்டது. அதே நேரத்தில் அந்த வழித் தடத்தின் பெரும் பகுதி பழைய முறையிலேயே செயல்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் அந்த நிறுவனம் இன்னும் சிறப் பாகச் செய்திருக்க முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இதனிடையே, ஜூ கூன் ரயில் நிலையத்தில் சென்ற புதன்கிழமை நிகழ்ந்த ரயில் மோதல் சம்பவம் தொடர்பில் தாலஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. அந்த ரயில் மோதல் சம்பவத்தில் 38 பேர் காயம் அடைந்தனர்.

போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், எஸ்எம்ஆர்டி நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி டெஸ்மண்ட் குவெக் இருவரும் நேற்று செய்தியாளர் களுக்கு விளக்கம் அளித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்