ஒரே கூரையின் கீழ் 25 தொழிற்சங்கங்கள்,சபைகள்

ஒரே கூரையின் கீழ் 25 தொழிற்சங்கங்கள்,சபைகள்

1 mins read
12e1cb12-b630-483d-956d-14670b962c70
-

நிறுவனங்கள் விரிவடையவும் வெளிநாடுகளில் தொழிலில் ஈடு பட அவற்றுக்கு உதவவும் முன்னெ டுக்கப்படும் தேசிய முயற்சியில் 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங் கள் இன்னும் அணுக்கமாகச் செயலாற்ற இணங்கியுள்ளன. இதற்கு ஏதுவாக ஜூரோங்கில் தொழிற்சங்க மையம் என்ற ஒரு புதுப்பிக்கப்பட்ட இடம் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மையத்தை பிரதமர் லீ சியன் லூங் நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். அந்த மையத்தில் உள்ள வசதி களைப் பல சங்கங்களும் பகிர்ந்து கொள்ளலாம்.

இதனால் அவற் றுக்கு நடைமுறைச் செலவு குறை யும். புதிய மையத்தில் கூட்டம் நடத்துவதற்கான அறைகள், பயிற்சியிடங்கள் உள்ளன. இந்தப் புதிய மையம் வெறும் செங்கல் கட்டடம் மட்டும் அல்ல என்று பிரதமர் லீ நேற்றைய நிகழ்ச்சியில் தெரிவித்தார். இது தொழிற்சங்கங்களும் சபைகளும் தங்களுக்கிடையில் தொடர்புகளை வலுப்படுத்திக்கொண்டு பரஸ்பர ஆதரவு, ஒத்துழைப்பு கலாசாரத் தைப் பேணி வளர்க்க உதவும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

பிரதமர் லீ சியன் லூங் ஜூரோங்கில் தொழிற்சங்க மையத்தை அதிகார பூர்வமாக நேற்றுத் திறந்து வைத்தார். நாட்டின் தொழில்மய வரலாற்றுத் தகவல்களை அவர் பார்வை யிட்டார். படம்: சாவ் பாவ்