ஆற்றில் குப்பை சேராதிருக்க இன்னமும் நாம் கற்கவேண்டும்

ஆற்றில் குப்பை சேராதிருக்க இன்னமும் நாம் கற்கவேண்டும்

2 mins read
17d9aa89-ec76-4e1f-9cd0-015f95798b27
-

சிங்கப்பூர் ஆற்றைத் தூய்மைப் படுத்தும் இயக்கம் 40 ஆண்டு களுக்கு முன் தொடங்கியது. என்றாலும் சிங்கப்பூரர்கள் கண்ட படி குப்பைகளைப் போட்டு ஆற்றை மாசுபடுத்தும் காரியங் களைச் செய்யாமல் இருப்பது எப்படி என்பதை இன்னமும் கற்றுக்கொள்ளவேண்டி இருக் கிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார். நிலத்தில் கண்டபடி குப்பை களைச் சேர்ப்பதால் அவை கடைசியில் ஆற்றையும் வடிகால் களையும் சேர்வதை அவர் சுட்டிக் காட்டினார். "ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

தரையில் குப்பைக் கூளங்களைப் போட்டு அசுத்தப் படுத்தாமல் இருப்பதை சிங்கப் பூரர்கள் இன்னமும் கற்றுக் கொள்ளவேண்டும்," என்று நேற்று திரு லீ தெரிவித்தார். மலாய் மொழி பெரித்தா ஹரியான் செய்தித்தாளின் 60வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் திரு லீ உரையாற்றினார். அந்த நிகழ்ச்சி சுவிசோட்டல் மெர்சண்ட் கோர்ட் சிங்கப்பூர் ஹோட்டலில் நடந்தது. அந்தச் செய்தித்தாளின் கொண்டாட்டங்களில், சிங்கப்பூர் ஆற்றைத் தூய்மைப்படுத்தும் இயக்கம் தொடர்பான ஐந்து நாள் கண்காட்சி ஒன்றும் நடக்கிறது. சிங்கப்பூர் ஆற்றைத் தூய்மைப் படுத்தும் இயக்கத்தில் ஒத் துழைப்பு, திட்டம், உறுதி, அர சியல் முடிவு ஆகியவை எல்லாம் இடம்பெற்றிருப்பதாக திரு லீ குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் ஆற்றுப் படுகைகளை சிங்கப்பூர் அகலப்படுத்தி, ஆழப்படுத்தியது, தூர்வாரியது. பன்றிப் பண்ணை களையும் இதர தூய்மைக்கேடு நிறுவனங்களையும் அரசாங்கம் அப்புறப்படுத்தியது.

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெளியிடும் பெரித்தா ஹரியான் மலாய் மொழி செய்தித்தாளின் 60வது ஆண்டுவிழா, 'ஆற்றோர நினைவலைகள்' என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. விழாவில் பிரதமர் லீ சியன் லூங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்