அரசாங்க நிதிபெற்ற 1,000 பேருந்துகளை சிங்கப்பூர் சாலை களில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த, $1.1 பில்லியன் செலவிலான ஐந்தாண்டு கால பேருந்துச் சேவை விரிவாக்கத் திட்டம் நிறைவுபெற்றுள்ளது. இந்தத் திட்டம் அறிமுகப்படுத் தப்பட்ட 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 218 பேருந்துச் சேவைகள் மேம்பாடு கண்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான மாடிப் பேருந்துகளை அறிமுகம் செய்தல், பேருந்துச் சேவைகளின் பயண எண்ணிக்கையை அதி கரிப்பது ஆகியவற்றின் மூலம் இந்த மேம்பாடு அடையப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. இந்த ஐந்தாண்டுத் திட்டத் துடன், சேவையை உயர்த்த 2014ஆம் ஆண்டில் அரசாங்கம் அறிமுகம் செய்த பேருந்து ஒப்பந்த மாதிரித் திட்டமும் இணந்து பேருந்துச் சேவை களுக்கு இடையிலான கால இடைவெளியை 30ல் இருந்து 15 நிமிடங்களாகக் குறைத்துள்ள தாக ஆணையம் தெரிவித்தது.
அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பிரதமர் லீ, டெக் கீ சந்தை, உணவங்காடியில் குடியிருப்பாளர்களைச் சந்திப்பதற்கு முன்பாக நேற்று அங் மோ கியோ அவென்யூ 1-ல் இருக்கும் புளோக் 220 முதல் புளோக் 341 வரை புதிய பேருந்தில் பயணம் செய்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

