அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பேருந்து முனையத்தில் குழாய் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்த முயன்ற பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை அமெரிக்க அதி காரிகள் கைது செய்துள்ளனர். அகாயத் உல்லா என்ற அந்த 27 வயது ஆடவரின் குடும்ப உறுப்பினர்களையும் அவனுடைய கூட்டாளிகளையும் பங்ளாதேஷ் போலிசார் தேடி வருகின்றனர். "உல்லாவின் குடும்பத்தாரை போலிஸ் தேடி வருகிறது. ஆனால் இதுவரையிலும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை," என்று சிட்டகாங் வட்டார காவல் துறை அதிகாரி அபுல் கைர் நதீம் கூறினார். அகாயத் உல்லா மீது பங்ளா தேஷில் எந்தக் குற்றப் பதிவுகளும் இல்லை என்றும் கடைசியாக அவன் கடந்த செப்டம்பரில் தாய் நாடு வந்திருந்ததாகவும் அந்த நாட்டின் போலிஸ் தலைவர் சொன்னதாக 'ராய்ட்டர்ஸ்' செய்தி கூறியது. உல்லா 'கிரீன் கார்டு' பெற்று, புரூக்ளினில் தன் தாயார், சகோதரி, இரண்டு சகோதரர்கள் ஆகியோருடன் வசித்து வந்ததாக நியூயார்க்கில் உள்ள பங்ளாதேஷ் தூதரக அதிகாரி ஷமீம் ஆஸான் குறிப்பிட்டார்.
தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட முயன்ற அகாயத் உல்லா 'கிரீன் கார்டு' பெற்று அமெரிக்காவில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. படம்: நியூயார்க் டைம்ஸ்

