பாதுகாப்பை வலுப்படுத்த துரித நடவடிக்கை குழுக்கள்

பாதுகாப்பை வலுப்படுத்த துரித நடவடிக்கை குழுக்கள்

1 mins read
242230b1-ae38-468c-8779-91af3f7a64f8
-

பயங்கரவாதத்தை முறியடிக்கும் முயற்சிகளை முடுக்கிவிட, சிங்கப்பூரின் சில முக்கிய இடங் களில் துரித நடவடிக்கை காவல் துறைக் குழுக்களை சிங்கப்பூர் காவல்துறை அறிமுகப்படுத்தியுள் ளது. ஆண்டிறுதி விழாக்காலத்தின் போது பாதுகாப்பை வலுப்படுத்த, மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஆர்ச்சர்ட், மரினா பே வட்டாரங்களில் டிசம்பர் 1 முதல் துரித நடவடிக்கை குழுக்கள் காவற்பணி ஆற்றி வருகின்றன. சிங்கப்பூர் காவல்துறையின் பாதுகாப்புக் காவல் பிரிவின் (Procom) ஒரு பகுதியான இக் குழுக்கள், ஏற்கெனவே நடப்பி லுள்ள தரைப்பணி படை, அவசர நடவடிக்கைக் குழு ஆகியவற்றுக் குத் துணையாகச் செயற்படும். துரித நடவடிக்கை குழுக்கள் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் காவற்பணியில் ஈடுப டுத்தப்படுவதால், தாக்குதல் நிக ழும்போது அக்குழுக்களே சம்ப வத்தை முதலில் கையாளுபவர் களாக இருப்பர்.

சிங்கப்பூர் காவல்துறையின் துரித நடவடிக்கை காவல்துறைக் குழுக்கள் நேற்று ஆர்ச்சர்ட் சாலையின் நீ ஆன் சிட்டி கடைத் தொகுதியில் காவற்பணி மேற்கொண்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்