இந்தோனீசியாவின் ஜாவாவில் நிலநடுக்கம்

இந்தோனீசியாவின் ஜாவாவில் நிலநடுக்கம்

1 mins read
cd4e9b78-d53d-4831-b9ab-bad79bc0bc6b
-

ஜகார்த்தா: இந்தோனீசியத் தீவான ஜாவாவை நேற்று நில நடுக்கம் உலுக்கியது. 6.5 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக் கத்தில் மூவர் உயிரிழந்த னர், ஏராளமானோர் காயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன என்றும் கூறப் படுகிறது. கட்டடம் இடிந்து விழுந்ததில் பெக்கலொங்கான் நகரத்தில் 80 வயது மூதாட்டி ஒருவரும் சியாமிஸ் நகரில் 62 வயது ஆடவர் ஒருவரும் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். யோக்யகார்த்தா நகரில் 34 வயது பெண் ஒருவர், வீடு இடிந்து விழுந்ததில் சிக்குண்டு மாண்டார். 43 கட்டடங்கள் மிகவும் மோச மான நிலையில் சேதமடைந்து இடிந்து தரைமட்டமாகியதாகக் கூறப்படுகிறது.

மத்திய ஜாவாவில் பானியுமாஸ் என்னும் இடத்தில் நிலநடுக்கத்தில் சேதமடைந்த மருத்துவமனை ஒன்றில் இருந்து நோயாளிகள் மீட்கப்பட்டு கார் நிறுத்துமிடத்திற்குப் பாதுகாப்பாக மாற்றப்பட்டனர். தாசிக்மலாயா, பங்கன்டாரன், சியாமிஸ் ஆகிய பகுதிகளே ஆக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. படம்: ராய்ட்டர்ஸ்